Skip to content
Home » நடிகை கீர்த்தியின் கலக்கல் கிளிக்ஸ்….. போட்டோஸ்….

நடிகை கீர்த்தியின் கலக்கல் கிளிக்ஸ்….. போட்டோஸ்….

  • by Authour

தென்னிந்திய மொழிகளில் மிக பிரபலமான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ‘இது என்ன மாயம்‘ படத்தில் அறிமுகமானாலும், பெயரை பெற்றுதந்தது என்னமோ  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ‘ரஜினி முருகன்’தான். தொடர்ந்து நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்கை வரவாற்று படமான ‘மகாநடி’ திரைப்படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார். இப்படி கீர்த்தி தனது திரைவாழ்கையில் உயர உயர பறந்துவருகிறார்.

photo

photo

தற்போது தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்திலும் தமிழில் உதயநிதியுடன்’ மாமன்னன்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதில் தசரா திரைப்படம் இம்மாதம் 30அம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான புரொமோஷன் பணிகள் காட்டுதீ போல மளமளவென  நடந்துவரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கீர்த்தி பக்காவாக தயாராகியுள்ளார்.

photo

photo

இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைபார்த்த ரசிகர்கள் என்ன அழகு….. என்ன அழகு…..என கீர்த்தி சுரேஷை வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *