எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார் . இந்த நிலையில் இன்று அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, சட்டமன்றம் தொடங்குவதற்கு முன் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் சந்தித்து, எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை அந்த இடத்தில் இருந்து மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு சபாநாயகர் என்ன பதில் அளித்தார் என்பது குறித்து தெரியவில்லை. ஏற்கனவே சபாநாயகர் அளித்த விளக்கத்தில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் என்ற பதவி சட்டமன்றத்தில் கிடையாது. எனவே ஓபிஎஸ் சீட்டை மாற்ற முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.