தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வார காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் அதிகரித்த வண்ணமே இருந்து நிலையில் தற்போது 5 சதவிகிதத்தை தாண்டி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கோவை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கையின் படி சென்னையை விட கோவை மாவட்டத்தில் குறைவான மக்களே பாதிக்கப்பட்டிருந்தாலும் சதவிகித அடிப்படையில் சென்னையை விட கோவை .4 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது.சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு 4.7 சதவிகிதம் இருக்கின்ற நிலையில் கோவை 5.1 சதவிகிதமாக உள்ளது. இது தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை விட அதிகமாகவும். பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் அதிகமாக பதிவாகி உள்ளது
கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.