224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்திலும் இறங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
அநேகமாக ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என கருதப்படுகிறது.