திருவள்ளூர் அருகே பெரிய குப்பத்தில் தந்தை படிக்க சொல்லி கண்டித்ததால் 9வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் 4ம் வகுப்பு படித்து வந்த சிறுமி வீட்டின் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். படிக்காமல் தொடர்ந்து விளையாடி வந்ததை கண்டித்ததால் , சிறுமி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.