திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் காந்திநகர் காலனியில் வசிக்கும் வடிவேல்942) . இவர் கரூரில் டாஸ்மார்க் பாரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி(38). இவர்களுக்கு ரோஷினி(12) என்ற மகளும் ஆரியராஜா( 10) மோகன ராஜா (2) ஆகிய மகன்களும் உள்ளனர் தொட்டியம் பண்ணை வீடு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு தொட்டியம் நோக்கி வடிவேல் ராஜா மோகன ராஜா ஆகிய நால்வரும் வந்துள்ளனர் அப்பொழுது காட்டுப்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென மோதியது . இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ரேணுகாதேவி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார் சிறு காயத்துடன் இருந்த வடிவேல் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் அதிஷ்டவசமாக இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஆரியராஜா மோகன ராஜா இருவரும் உயிர்த்தபினர். இதுகுறித்து தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறார் மேலும் ரேணுகா தேவியின் உடல் கூறு ஆய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.