ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து டில்லியில் எம்.பிக்களுக்கான அரசு வீட்டை ஒரு மாதத்தில் காலி செய்யும்படி ராகுலுக்கு மக்களவை செயலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி, மக்களவை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நான் அரசு வீட்டை காலி செய்கிறேன்.20 வருடமாக அரசு வீட்டில் நான் வாழந்த காலம் மறக்க முடியாதவை. என்று அதில் கூறி உள்ளார். டில்லி துக்ளக் லேனில் உள்ள வீட்டில் ராகுல் கடந்த 20 வருடமாக வசித்து வந்தார்.