திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகனூர் ஊராட்சியில் 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகளை மியவாக்கி முறையில் நடவு செய்து அடர்வனம் காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட வளர்ச்சித் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.