நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணை கைதி ஒருவரின் பல்லை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல்வீர்சிங், பல்பிடுங்கியது உறுதியானது. எனவே அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.