செப்டம்பர் மாதம் முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் யார், யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைவருக்கும் வீடு என்றால், வீடு இல்லாதவர்களுக்கு வீடு என்று பொருள். அதன்படி இந்த திட்டம் யாருக்கு பயனளிக்கும் என்பது பொதுமக்களுக்கே தெரியும். மகளிர் உாிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும். ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும் பெண்கள், வீட்டு வேலைகக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலUக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.