தமிழகத்தில் ஏழை குடும்ப த்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் வாழ்க்கை தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் தான் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறார். இதன் அடுத்தகட்டமாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டு ஒதுக்கி உள்ளோம். இதையும் படியுங்கள்: 40 அடி திடீர் பள்ளத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் ஆய்வு நடத்த முடிவு தமிழ்நாட்டில் 2 கோடியே 33 லட்சம் ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். இதில் யார்-யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கும் என்பதை வருவாய்த்துறையினரும், மகளிர் மேம்பாட்டுத்திட்ட துறையும் இணைந்து பட்டியல் சேகரித்து வருகின்றனர். தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதால் அதற்கேற்ப பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நிதித்துறையின் பங்கு நிதி ஒதுக்குவது தான். தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் அளவுகோல் என்ன என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் மூத்த அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி முடிவு எடுப்பார். இதையும் படியுங்கள்: நெட் தீர்ந்ததால் பப்ஜி, ப்ரீபயர் கேம் விளையாட முடியவில்லை: 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை எனவே இவர்களுக்கு தான் ரூ.1000 பணம் கிடைக்கும். இவர்களுக்கு பணம் கிடைக்காது என்று இப்போதே யூகத்தின் அடிப்படையில் கருத்து கூற முடியாது. அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் துறையை பொறுத்தவரை தமிழகத்தின் வருமான வரி செலுத்துபவர்களின் பட்டியலை அந்த துறையில் இருந்து கேட்டு பெறுவோம். மேலும் கருவூலத்திற்கு பணம் ஒதுக்கும் போது அது முறையாக பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் ஆன்லைன் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி கணக்கில் பணம் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தமிழகத்தில் 2.33 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கிறது என்பதற்காக அவ்வளவு பேருக்கும் பணம் கொடுக்க இயலாது. அப்படி பார்த்தால் ஆண்டுக்கு சுமார் ரூ.27,960 லட்சம் கோடி தேவைப்படும். இது பணவீக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே அரசின் வழி காட்டுதலுக்கு ஏற்ப யார்-யார் தகுதி உடையவர்கள் என்பதை மகளிர் மேம்பாட்டு துறையினர் முடிவு செய்து எங்களுக்கு பட்டியல் வழங்குவார்கள். அந்த பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகுதான் யார்-யார் தகுதியானவர்கள் ரூ.1000 பெற யார்-யார் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்படும். இதற்காக வழிகாட்டுதல் குழு விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.