தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி வெளியானது. இந்த தேர்வினை 18 லட்சத்து 36 ஆயிரம் பேர் எழுதினர். 10,117 இடத்துக்கு இந்த கடுமையான போட்டி ஏற்பட்ட நிலையில் தேர்ச்சி பெறாத பலர் அதிர்ச்சி அடைந்தனர். இதில் 5 லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இவர்கள் இன்று சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தேர்வாணைய அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அதிகட்டாயத் தமிழ் தேர்வில் 5லடத்துக்கும் அதிகமானவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர். தமிழ்த்தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் தேர்வுத்தாள் திருத்தப்படாது என்பதால் அவர்களுக்கான தேர்வு முடிவும் வெளியாகாது . இது தொடர்பான விரிவான விளக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 நாளில் அளிக்கப்படும் என்றனர்.