கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜி நகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் ( 60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன் பாம்பு இனத்தினை சார்ந்த கட்டுவிரியன் பாம்பு இருந்ததை கண்டறிந்து மக்களை காப்பாற்றும் வண்ணம் தானாகவே பாம்பு பிடி வீரராக மாறி சுமார் 20 நிமிடமாக அந்த பாம்பினை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துள்ளார்.
அந்த பிளாஸ்டிக் டப்பாவில் துவாரங்கள் அமைத்து பாம்பு சுவாசிப்பதற்காக ஓட்டைகள் போட்டு,
பின்னர் முறையாக, வெங்கமேடு காவல் நிலையம், கரூர் நகர காவல் நிலையம் ஒப்படைக்க முற்பட்ட போது, காவலர்கள் ஒரே கூச்சல் போட்டு பாம்பு உஷ் உஷ் என்று சப்தம் போடுகின்றது என்று மிரள, பின்னர் கரூர் தீயணைப்பு
துறை மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்திற்கு சென்று கொடுக்க சென்றார்.
அங்கே முறையாக பதில் இல்லாததோடு, உடனே பாம்பு உயிர் முக்கியம் ஆகவே, அதை முறையாக காட்டில் விட வேண்டுமென்பதே லட்சியம் என்றும் கூறியுள்ளார்.
பின்பு ஊடகத்துறையினருக்கு போன் செய்த போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தாந்தோணிமலை பகுதியில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு லோகநாதன் பாம்பினை ஒப்படைத்தார். பாம்பு உயிர் முக்கியம், மக்களின் உயிர் அதை விட முக்கியம் என்ற காரணங்களால் தானே பாம்பு பிடி வீரரராக மாறியதாகவும், டிஸ்கவரி சேனலை பார்த்து பாம்பு பிடி வீரராக மாறியதாக தெரிவித்தார்.