திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்தவர் விலசன்(26) இவர் கோவையில் டீக்கடையில் வடை, பஜ்ஜி போடும் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன் சொந்த ஊரான சவேரியர்புரம் வந்திருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விலசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, வில்சன் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது. அவர் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி ஆடி உள்ளார். இதில் அவருக்கு ரூ.4 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஆன் லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு மசோதா நிறைவேற்றியுள்ள நிலையில், அதற்கு கவர்னர் ரவி அனுமதி கொடுக்க மறுத்து வருகிறார். இந்த நிலையில் ஆன் லைன் ரம்மிக்கு தமிழகத்தில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. இனியாவது கவர்னர் ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் அளிப்பாரா என்பது தான் இப்போது தமிழக மக்கள் மத்தியில் உள்ள கேள்வி.