கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 25 புள்ளி 57 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
ரூபாய் 13.57 லட்சம் மதிப்பில் சூரியனூரில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பணிக்கும், 6.36 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.5.91 லட்சம் மதிப்பு மயானத்தில் காத்திருப்போர் கூடம்
கட்டுவதற்கான பணிக்கும் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி சக்திவேல், திமுக மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், குளித்தலை ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் உடன் இருந்தனர்.