தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணி ஓம் ஓயாமணி சித்தர் பெருமானுக்கும், ஓம் பறக் கொண்டாள் அம்மாவிற்கும் 11 ம் ஆண்டு பங்குனி மாத, பரணி நட்சத்திர குரு பூஜை பெருவிழா நடைப் பெற்றது. இதை முன்னிட்டு எட்டு சித்தி நவக் கிரக யாகம் நடைப் பெற்றது. தொடர்ந்து விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பரணி தீப, தீபாரதனை நடைப் பெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் கேசவன், சித்த ஊழியர் பாலைவனநாதன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பட விளக்கம்: குரு பூஜை பெரு விழாவில் விசேஷ அலங்காரத்தில் ஓம் ஓயாமணி சித்தர்.