புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இன்று
நாகையில் ஜாக்டோ ஜியோ வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை வருவாய் கோட்டாட்சியர் சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை செய்திட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.