விஏஓ, தட்டச்சர், எழுத்தர் உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் ரிசல்ட் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று மாலையே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. தேர்வாணைய இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.