தலைக் கவசம் அணிவதன் முக்கியத் துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாபநாசத்தில் நடைப் பெற்றது. பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் பாபநாசம் அரசு வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், கூடுதல் அரசு வழக்கறிஞர் சுதா, பாபநாசம் டி.எஸ்.பி பூரணி உட்பட வழக்கறிஞர்கள், காவல் துறையினர், கோர்ட் ஊழியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். கோர்ட் அருகில் தொடங்கியப் பேரணி பாபநாசத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் பங்கேற்றவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் பங்கேற்றவர்களுக்கு காவல் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை
பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.