உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் காசநோய் கட்டுபடுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் காசநோய் கட்டுபடுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து பணியாற்றிய
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியின்போது காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.