தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.3.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோர் குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி. லட்சுமி பிரியா, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை ஆகியோர் உள்ளனர்.
மேலும் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காலநிலை மாற்ற நிருவாகக் குழு உறுப்பினர் எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் ஜோனஸ் மொபேர்க்,
சர்வதேச ஹைட்ரோ சக்தி சங்கத்தின் முதன்மைச் செயல் அலுவலர் எட்டி ரிச், ப்ரோக்ளைம் முதன்மை செயல் அலுவலர் திரு. கவின் குமார் கந்தசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.