நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியன் இன்று காலை சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதுபற்றிய செய்தி அறிந்ததும் ரசிர்கள், திரைப்படத்துறையினர் அஜீத் வீட்டு முன் திரண்டனர். அங்கு மெயின் கேட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. யாரையும் வீட்டுக்குள் விடவில்லை. முக்கிய பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில்ெ சன்று அஞ்சலி செலுத்தினார்.
