கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக முறையாக அப் பகுதி பொதுமக்களுக்கு கோர்ட் உத்தரவின் படி சாலை விரிவாக்கத்திற்கான ஆவணத்தை அனுப்பி உள்ளனர்.இன்று கருப்பராயன் கோவிலை அகற்ற உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த
சென்ற மகாலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் தீபிகா முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் கோவில் முன்பு பஜனை பாடிய பொழுது திடீரென கூட்டத்தில் ஒருவருக்கு சாமி வந்து ஆடியது பரபரப்பாக காணப்பட்டது. தனியார் இடத்தில் அருகில் கோவில் உள்ளது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.