அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த தா.பழூரில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சிமாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கே எஸ் அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு மோடி அரசு அனுமதி அளிப்பதில்லை. ஜனநாயகத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து, எதிர்க்கட்சிகள் விவாதம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் அதற்கு அனுமதி வழங்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்க வேண்டும். அதற்கு ஆளும் கட்சி பதில் சொல்ல வேண்டும். அதுதான் ஜனநாயகம். எனவே சட்டமன்றம் என்பதும் நாடாளுமன்றம் என்பதும் விவாதம் செய்வதற்கு தான். ஆனால் மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தினை ஜனநாயக படுகொலை செய்கிறது. ஜனநாயகத்தை குழி தோண்டி மோடி புதைக்கிறார். காலால் போட்டு மிதிக்கிறார்கள். மக்கள் மன்றம் அதற்கு பதில் சொல்லும் என அழகிரி தெரிவித்தார்.