கோவை, பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம் பட்டியை சேர்ந்த சுரேஷ் . குடும்பத்துடன் வசித்தும் இவர் தின கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது தாய் பங்காரு அம்மாள்(எ)நாச்சம்மாள் அவரது தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். சுரேஷ்க்கு திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டார். சில தினங்களுக்கு முன்பு நாச்சம்மாள் அவர்களுக்கு கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து உள்ளனர். தன் மகன் சுரேஷிடம் நாச்சம்மாள் நான் உன்னை மிகவும் சிரமப் படுத்துகிறேன் என தினமும் கூறிவந்துள்ளார். திடீரென நாச்சம்மாள் காணாமல் போனதால் சுரேஷ் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் தனது தாய் காணவில்லை என புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் நாசம்மாள் அவரது தோட்டத்தில் பழைய மோட்டார் ரூம் அருகே தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். உடலை மீட்ட போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,தன் மகன் சிரமப்படக்கூடாது என்பதற்காக தாய் தீட்டு மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.