கோயம்புத்தூரை சேர்ந்த 12 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் சதாசிவம் (48), மதன் (24), குமார் (18), ஆகிய மூன்று பேரும் அடிக்கடி சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லையளித்து வந்துள்ளனர்.சிறுமியின் பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை சைல்டு லைன்
அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.இதையடுத்து அவர்கள் அளித்த புகார் அடிப்படையில் சதாசிவம், மதன் , குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.