காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் அந்த இடத்திலேயே உடல கருகி பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை9 ஆனது. மற்றவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தகவல் அறிந்ததும் போலீசார், மாவட்ட அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
