மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (84) இவர் இந்திய ராணுவத்தில் கஸ்டம்ஸில் வேலை பார்த்து கடந்த 2000 ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவருக்கு விஜயலட்சுமி (81) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் மேலும், வசந்தகோகிலம் என்கிற இரண்டாவது மனைவியும், அவருக்கும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அனைவரும், ஒரே வீட்டில் ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்தனர்.கணவனும். முதல் மனைவியும் இருவருமே எந்த வித பிரச்சனையும் இல்லாமல் கடந்த 51 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்து உள்ளார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சீனிவாசன் மனைவியின் உடலை பார்த்தபடியே இருந்த நிலையில் திடீரென உடல்மீது சாய்ந்து விழுந்து உயிரிழந்தார். மனைவியின் மீது கொண்ட நீங்கா காதல் காரணமாக ஈருடன் ஓர் உயிராக வாழ்ந்த இந்த தம்பதியினர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். முன்னாள் ராணுவ வீரர் அவரது மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழும் போதும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் ஒரே நாளில் உயிரிழந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.