1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்தனர். பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதற்கான விழா கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இந்த விழாவின் முக்கி அம்சமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை 100க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணி சென்னையில் இருந்து காஞ்சிபுரம்,திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர் திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக வருகின்ற 28 ந்தேதி கன்னியாகுமரி சென்றடைகிறது.
பெண் போலீசாரின் இந்த சைக்கிள் பேரணி இன்று திருச்சி சமயபுரம் வந்தடைந்தது. சைக்கிள் பேரணியில் பங்கேற்றுள்ள பெண் காவலர்களை பாராட்டும் விதமாக மாவட்ட எஸ்பி சுஜித் குமார் அவர்களை வரவேற்று பெண் காவலர்களுடன் இணைந்து சைக்கிள் ஓட்டி சென்றார். சமயபுரம் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருச்சி மாவட்ட
மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் சிறப்புரையாற்றிய பின் பெண் காவலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வில் லால்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காவலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.