நாளுக்கு நாள் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மார்ச் 21 ஆம் நாள் உலக வன தினம் அதாவது காடுகள் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரம் நடும் விழா இன்று நடைபெற்றது. இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நாகை எஸ்பி
ஜவஹர் ஆகியோர் மரங்களை நட்டு வைத்தனர். தொடர்ந்து வன உயிரினங்களை காக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். வனத்துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், வன ஆர்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.