தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் குழு சந்தித்து, அவ்வமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் முன்னேற விழையும் மாவட்ட திட்டங்கள் ஆகியன குறித்து கலந்தாலோசித்தனர். இந்த சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சிறப்புச் செயலாளர் த.சு.ராஜ்சேகர், மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் (மு.கூ.பொ) சுதா, நித்தி ஆயோக் ஆலோசகர் . பார்த்தசாரதி ரெட்டி, துணைத் தலைவரின் தனிச்செயலர் ஏ. முத்துகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.