தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை. விவசாய நிலங்கள் குறைந்து வருவதால், உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். தானியங்கள் மட்டுமல்ல், காய்கறி, பழங்கள் ஆகியவற்றையும் போதிய அளவில் உற்பத்தி செய்வது சவால் நிறைந்தது. உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவை.
நவீன தொழில் நுட்பத்திலன் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு. வோள்ணமையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல. மனிதர்களை பண்படுத்துவது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
1 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.33 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக 1065 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட்டால் தான் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த முடியும்.
விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும். சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்ட ரேஷன்கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும். சிறுதானிய மண்டலங்களில் புதிதாக திருப்பூர் கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்கள் சேர்க்கப்படுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு. 25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும்.
வேளாண்மை சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு
கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மாற்றுபயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடைமடைகள் தூர்வாரப்பட்டு பாசன நீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்யப்படும். சிறுதானிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய உணவு திருவிழா நடத்தப்படும்.
சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
சம்பா அறுவடைக்கு பின் சிறுதானியங்கள் , பணறுகள் சாகுபடி செய்ய நிதி உதவி.
கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடு பொருள் தயாரிக்க நிதி உதவி வழங்கப்படும்.
வானிலை நிலவரம், மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.
தொடர்ந்து அவர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.