தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரங்களை சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு வகையான வைரஸ் பாதிப்புகளை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.