கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் வரும் செப்.15ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுவதை வரவேற்று திமுக சார்பில் அம்மாபேட்டையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. இதில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், பேரூர் திமுக செயலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.