ரயில்வே நிர்வாகத்தின் செயல் இயக்குனர் அறிவுறுத்தலின்படி ரயில்வேயில் பணியாற்றும் 10,000 ரயில்வே ஓடும் தொழிலாளர்களை சரண்டர் செய்யும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பாதுகாப்பு விதிகளை மீறி சரக்கு ரயில்களை கார்டுகள் இல்லாமல் இயக்கம் திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும், சரக்கு ரயில்களில் பணியாற்றும் கார்டுகள் மற்றும் ஓடும் தொழிலாளர்களை 9 மணி நேரம் பணி செய்ய நிர்பந்திப்பதை கண்டித்தும், ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்தும் இன்றைய தினம் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சி ஜங்ஷன்
ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்ஆர்எம்யூ துணைபு பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 150 க்கும் மேற்பட்ட ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு ரயில்வே ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் இதேநிலை தொடர்ந்து நீடித்தால் ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து முன்னறிவிப்புடன் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.