Skip to content
Home » இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

இன்று(மார்ச் 20) உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  சிட்டுக்குருவியினத்தை காப்பாற்றவும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.  சிட்டுக்குருவி பற்றி தமிழ்  இலக்கியங்களிலும் கூறப்படுகிறது.

உலகம் முழுக்க பரவிய பறவை ஒன்று உண்டெனில் அது சிட்டுக்குருவிதான். ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள்தான் சிட்டுக்குருவிகளின் தாயகமாக கருதப்படுகிறது. மனித இனம் வாழும் இடமெல்லாம் அதாவது துருவப் பகுதிகளை தவிர்த்து, அனைத்து நிலப்பகுதிகளிலும் சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. இந்தியாவின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கே தார் பாலைவனம் வரை இந்திய துணை கண்டம் எங்கும் சிட்டுக்குருவிகள் பரவி உள்ளன.  இதற்கு முக்கிய காரணம் மனிதரை அண்டி வாழும் பண்பு சிட்டுக்குருவிகளுக்கு உண்டு.  இமயமலையில்கூட 4000 மீட்டர் உயரம்வரை சிட்டுக்குருவிகள் இருக்கின்றனவாம். உலகில் எங்காவது ஒரு புதிய நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டால் ; அங்கு ஏற்றுமதியாகும் முதல் பறவை சிட்டுக்குருவியாகதான் இருக்கும் என்கிறார்கள் பறவையியலாளர்கள்.

கிராமங்களில் வீடுகளில்,  கூரைகளில் இது கூடுகட்டும். அப்படி வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டினால் அந்த குடும்பம் தலைமுறை விருத்தியாகும் என்பது நம்பிக்கை . எனவே வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை கலைக்கமாட்டார்கள்.  .  இது மனிதனை ஒட்டியே வாழ்வதால் இதை ஆங்கிலத்தில் house  sparrow  என்கிறார்கள்.

சினிமாக்களிலும் சிட்டுக்குருவி பற்றி பல பாடல்கள் உண்டு.  ஆனால் கிராமங்களில் லேகியம் விற்பவர்கள் தான் சிட்டுக்குருவியின் பெயரை  கெடுத்து விட்டார்கள்.

 

 

து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!