உலக சிறுதானியங்கள் மாநாட்டை டில்லியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது பாப்பம்மாளை சந்தித்த பிரதமர் மோடியை அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி, பாப்பம்மாளின் காலை தொட்டு அவரிடம் ஆசி பெற்றார்.