ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று கருட மண்பத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.48 லட்சத்து 29 ஆயிரத்து 375 ரொக்கமும், 188கிராம் தங்கமும், 3121 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 134-ம் இருந்தது.
உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.