எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அணியின் தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொது செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. 18ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 20ம் தேதி மனு மீது பரிசீலனை நடக்கிறது. 21ம் தேதி மனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27ம் தேதி காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தலைமை கழகத்தில் ரூ.25,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை நாளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனநாயக முறைப்படி கட்சி பொது செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார்.