சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம். இந்த ஸ்டேடியத்தில் ஏற்கனவே 31,140 பேர் காலரியில் அமர்ந்து போட்டிகளை ரசித்து பார்க்க வசதி இருந்தது. இந்த நிலையில் இந்த ஸ்டேடியத்தை நவீனப்படுத்தவும், கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.139 கோடியில் புனரமைப்பு பணிகள் நடந்தது.
அந்த பணிகளில் புதிதாக 5,306 இருக்கைகளுடன் கருணாநிதி பெயரில் ஒரு காலரி உருவாக்கப்பட்டது. அதற்கு கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்போது சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 36ஆயிரத்து 446 பேர் காலரியில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தை இன்று மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் ஐசிசி தலைவர் சீனிவாசன், சிஎஸ்கே கேப்டன் டோனி, சீனிவாசன் மகள் ரூபா குருநாத் , பிராவோ ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அனைவருடனும் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.