கோவையில் நடைபெற்ற இரு வேறு கொலை சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்யும் நபர்கள் உள்ளிட்டவர்களை காவல் துறையினர் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக கோவையை சேர்ந்த தருண் என்கின்ற இன்ஃபெண்ட் ராஜ் என்ற
இளைஞர் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் rowdy-baby-007 என்ற ஐடியில் பதிவேற்றம் செய்துள்ளார்.ஆயுதங்களை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்துகின்ற வகையில் பதிவேற்றம் செய்ததற்காக அவர் மீது ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இவர் மீது போதைப் பொருள் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.