திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்ச்சியாக ஸ்ரீ மகா மாரியம்மன் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
காட்டுப்புத்தூர் பகுதி மக்கள் நன்மைக்காகவும் இப்பகுதி மக்கள் கல்வி, செல்வம், வீரத்தில், சிறந்து விளங்கவும் ஆரோக்கியத்திற்கும் மற்றும் இப்பகுதியில் விவசாயம் செழிக்க மக்கள் செழுமையுடன் வாழ மகா சண்டியாகம் நடந்தது இதில் விநாயகர் காளிகாம்பாள் ஸ்ரீ சப்த மாதர்கள் வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது பின்பு வர்ண பூஜை கோ பூஜை யாகசாலையில் 83 -இடங்களில் பழி பூஜை சண்டிகா ஆராதனைகள் 700- ஸ்லோகங்கள் சொல்லி யாகம் தொடங்கியது மற்றும் 64- பைரவர்கள் ஸ்ரீ சண்டிகா ஹோமம் மகா பூர்ணாவதி 16- விதமான திரவியங்களால் அபிஷேகம் 13- வகையான தேவைகளுக்கு பூஜை மற்றும் திரவியங்களால் மிகப் பெரிய பிரம்மாண்டமான மகா சண்டி யாகம் நடைபெற்றது
இதில் யாக குண்டலத்தில் பலவிதமான பழங்கள் மற்றும் திரவியங்கள் பல வண்ண பூக்கள் மற்றும் யாகங்களை சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்தனர் பின்பு யோகத்தின் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஸ்ரீ மகாமாரியம்மன் க்கு மாவிளக்கு மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடத்தி மண்டல பூஜை நிறைவு விழா மகா தீபாரதனை நடைபெற்றது இந்த யாகத்திலும் பூஜைகளிலும் பொதுமக்கள் பெண்கள் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டனர்