இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டது. திடீரென அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்தது. மாண்டாலா மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை தேடி இந்திய ராணுவ வீரர்கள், மீட்புபடையினர் விரைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் சீட்டா ரகத்தை சேர்ந்தது. ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் வீரர்கள் என்ன ஆனார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.