தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று ஒரே இரவில் நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து அங்குள்ள பீரோவை உடைத்துள்ளனர். அதில் பழைய துணிகள் மட்டுமே இருந்ததால் அதனை அப்படியே போட்டுவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்து பைகளை எடுத்து சென்றுள்ளனர். அதில் வீட்டு பத்திரங்கள் மட்டுமே இருந்துள்ளது. இதனையடுத்து மற்றொரு வீட்டில் ஓட்டை பிரித்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பின்னர் மற்றொரு வீட்டின் பின்புற கதவை உடைக்க முயற்சித்துள்ளனர்.
கதவை உடைக்க முடியாததால் கொள்ளை கும்பலை சேர்ந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீஸார் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.