சென்னை தலைமை செயலகத்தில் இன்ற காலை 10.30 மணி அளவில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு, உற்பத்தி குறைவு புகார்கள் வந்ததை தொடர்ந்தும், பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பதாலும் இது தொடர்பாக அமைச்சர் நாசர், முதல்வருடன் ஆலோசித்ததாக தெரிகிறது. முதல்வரை சந்தித்த பின், அமைச்சா் நாசர், பால் உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.