சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் டாக்டர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த டாக்டர் தனது சசோதரனின் செல்போனுக்கு ‘பெற்றோரை பார்த்துக்கொள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாயமாகிவிட்டார். அந்த குறுஞ்செய்தியை பார்த்த டாக்டரின் சகோதரர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான டாக்டரை தேடி வருகிறார்கள்.