திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட டிஎஸ்பி மணிகண்டன் கூறுகையில் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.அதில் ஒரு பகுதியாக புள்ளம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது சோதனையில் சார்பதிவாளர் அலுவலர் பரிமளாவிடம் சோதனை செய்ததில் எந்தவிதமான முறைகேடுகளில் ஈடுபட்ட ஆவணங்களும் இல்லை
என்பது தெரியவந்தது. இது வழக்கம்போல் நடத்தப்படும் சோதனை தான் என கூறினார்
மூன்று மணி நேரம் நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதால் புள்ளம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.