டில்லியில் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை இன்று சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது .தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் 3 மாநில தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்றதற்கு அதிமுக சார்பில் தம்பிதுரை வாழ்த்து தெரிவித்ததாக தகவல்தம்பிதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வரும் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது எடப்பாடி பிரதமரை சந்திக்க விரும்புகிறார். அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரியதுடன், தற்போது அதிமுக-பாஜ மோதல் போக்குகுறித்து பிரதமரிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.