கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் , புகைபிடித்தவாறு, ஆயுதங்களுடன் வன்முறையை தூண்டும் வகையில் பாடல்வரிகளை பாடியபடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர காவல் துறையினர் அப்பெண்ணை தேடி வந்தனர்.
அதேசமயம் அந்தப் பெண் தான் தற்பொழுது திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் ஆறு மாதம் கருவுற்று இருப்பதாகவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் ஆயுதங்களுடன் பதிவிட்ட வீடியோக்கள் எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த இளம் பெண் தமன்னா சங்ககிரி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்ற கோவை போலீசார் தமன்னாவை பிடித்து கோவைக்கு அழைத்து வந்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தமன்னாவை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்.