திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிராட்டியூர் குளத்தில் முட்செடிகளை அகற்றி தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து இந்த பணிகளை தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், மேயர் .மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் ரா. வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, .ஸ்டாலின் குமார், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, நகராட்சி பொறியாளர் சிவபாதம், டால்மியா பாரத் பவுண்டேஷன் செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.